சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை: பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம்

சிங்கப்பூரில் பலத்த இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - அதே போல வெயிலும் பொளந்து கட்டும்
Hannah Martens

சிங்கப்பூரின் இன்று (நவம்பர் 7) பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கனமழை எதிரொலியாக தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) இன்று மாலை 5:02 மணிக்கு கனமழை எச்சரிக்கையை வெளியிட்டது.

சிங்கப்பூரின் பல பகுதிகளில் மாலை 5:30 மணி முதல் 6 மணி வரை மிதமான மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக NEA ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

“உறவு வைத்துக்கொள்ள ஆண் தேவையில்லை… இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” – சிங்கப்பூர் பிரபல நடிகை ஜேஸ்லின் டே

தேசிய நீர் அமைப்பான PUB திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று கூறியதை NEA சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ள அபாயம் இருக்கும் இடங்கள்

  • Telok Kurau [5:30pm]
  • Lor 2 Toa Payoh [5:12pm]
  • Wan Tho Ave [5:13pm]
  • Mt Vernon Rd [5:12pm]
  • Sg Tongkang [5:09pm]
  • Puay Hee Ave/ Siak Kew Ave [5:07pm]
  • Macpherson Rd/ Playfair Rd [5:01pm]
  • Happy Ave North [5:02pm]

குறைந்தது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்தப் பகுதிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

விமான கட்டணம் குறையும்.. போட்டி குறித்த கவலை – SIA எடுத்துள்ள அதிரடி முடிவு