மெரினா பேயில் மிதந்த ஆடவர் சடலம் (வீடியோ) – என்ன நடந்தது..? போலீஸ் விசாரணை

Photo Credit: TODAY

மெரினா பே தண்ணீர் பகுதியில் நேற்று சனிக்கிழமை (டிச. 25) காலை 68 வயது முதியவரின் சடலம் மிதந்தது தெரியவந்தது.

அன்று காலை 8:50 மணியளவில் 6 Bayfront Aveயில் இருந்து (மெரினா பே சாண்ட்ஸ் எதிரே) உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

கிறிஸ்துமஸைக் கொண்டாட சென்றபோது ஏற்பட்ட விபரீதம்: கடலில் தவறி விழுந்த ஆடவர்

SCDF வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததும், உடல் ஒன்று தண்ணீரில் மிதப்பதை கண்டனர். அதன் பின்னர் மீட்புக்குழுவினர் உடலை மீட்டனர்.

இந்நிலையில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த மரணத்தில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கப்படவில்லை என்று போலீசார் கூறினர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பான வீடியோ அடங்கிய புகைப்படங்களை Today வெளியிட்டுள்ளது, சில SCDF அதிகாரிகள் மீட்புப் படகில் இருப்பதை அதன் மூலம் காண முடிகிறது.

காணாமல் போன ஆடவரை தேடிவரும் போலீசார் – தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கோரிக்கை