போயிங்கின் 777x விமான சோதனை ஓட்டம் ; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன்பதிவு…!

Boeing’s 777x Finally Takes To The Skies On Its Maiden Flight

அதிக இட வசதிகொண்ட புதிய தலைமுறை போயிங்கின் 777x விமானம் கடந்த சனிக்கிழமையன்று தனது முதல் சோதனை பயணத்தை நிறைவு செய்தது.

போயிங் நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதன் காரணத்தால் அதன் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் பயணிகளிடம் சோதனை – சிங்கப்பூர் டாலர் பறிமுதல்..!

இந்நிலையில், புதிய தலைமுறை விமானமான போயிங் 777x வாஷிங்டனின் எவரெட்டிலிருந்து புறப்பட்டு சுமார் நான்கு மணி நேரம் கழித்து சியாட்டலில் தரையிறங்கியது.

இது வளையும் இறக்கைகளை கொண்ட முதல் வர்த்தக விமானம் ஆகும். மேலும், இந்த விமானத்தில் பெரிய ஜன்னல்கள் மற்றும் பயணிகளின் இருக்கைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் உலகின் மிகப்பெரிய இரட்டை-இயந்திர ஜெட் விமானம் ஆகும், ஆனால், இன்னும் இது ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” – விமானக் கண்காட்சி..!

தொடர் சோதனைகளில் தகுதி சான்று பெற்று வரும் 2021- ஆம் ஆண்டில் இருந்து பொதுபயன்பாட்டிற்கு இந்த 777x ரக விமானம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, இந்த விமானங்களை 8 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அடங்கும். இதை தவிர பிரிட்டிஷ் ஏர்வேஸ், கேதே பசிபிக், எமிரேட்ஸ், லுப்தான்ஸா ஆகியவை அடங்கும்.