பூன் லே டிரைவ் ஆயுதம் ஏந்திய தாக்குதல்: சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள்

Police conduct manhunt for duo who attacked two men with weapons in Boon Lay
Screengrabs of videos

பூன் லே டிரைவில் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை தேடி வந்த நிலையில், அவர்கள் நேற்று (ஏப்ரல் 07) கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

முகக்கவசம் அணிவதற்கான புதிய விதிகள்: மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி – உஷார்

ஆபத்தான ஆயுதங்கள் ஏந்தி இருவரை காயப்படுத்தியதற்காக 20 மற்றும் 21 வயதுடைய அந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் ஏப். 6 மாலை 5:02 மணிக்கு பிளாக் 175 பூன் லே டிரைவில் உதவி வேண்டி அழைப்பு விடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட 22 மற்றும் 23 வயதுடைய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இருவரும் இதில் பாதிக்கப்பட்ட மற்ற இருவருக்கும் தெரிந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

விரிவான விசாரணைகள் மற்றும் போலீஸ் கேமராக்கள் மற்றும் சிசிடிவி உதவியுடன், ஜூரோங் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் இருவரின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

பின்னர், நேற்று ஏப். 7ஆம் தேதி மாலை 4:05 மணியளவில் உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 12ல் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேர், நீண்ட ஆயுதங்களால் இருவரை காயப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் 2023ஆம் ஆண்டுக்கான “பொது விடுமுறை” நாட்களின் பட்டியல் வெளியீடு!