‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கு முதியவர்கள் செப்.14 முதல் பதிவு செய்யலாம்!

Photo: Ministry Of Health/Facebook Page

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் இடைவிடாமல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்று முதியவர்களுக்கு பரவ அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் நான்காவது முட்டை பண்ணை… கையெழுத்தானது ஒப்பந்தம்!

அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இதுவரை சுமார் 87%- க்கும் அதிகமானோர் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். இந்த மாத இறுதியில் 95%- க்கும் அதிகமானோருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கொரோனா தடுப்பூசி மருந்துகளை அண்டை நாடுகளுக்கும் இலவசமாக சிங்கப்பூர் அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் நம் நாட்டு மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டு மக்களையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு களமிறங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். புற்றுநோய் முதலான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருப்போருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம் (அல்லது) நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு இந்த ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டிருக்கும் முதியவர்கள் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள அழைப்பு விடுக்கப்படும். அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், அவர்கள் www.vaccine.gov.sg என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். ‘பூஸ்டர்’ தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்”. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காணொளி மூலம் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங், “குறுஞ்செய்தி வரும் போது முதியவர்கள் ‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கு பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.