தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு எல்லைக்கட்டுப்பாட்டில் மாற்றம் செய்ய அதிக தகவல்கள் தேவை

Border Measures for Travelers
Singapore Airport

தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு எல்லைக்கட்டுப்பாட்டில் மாற்றம் செய்ய அதிக தகவல்கள் தேவை என்று சுகாதாரத்துறை மூத்த துணையமைச்சர் திரு. ஜனில் தெரிவித்துள்ளார்.

பயணிக்கும் மக்களுக்கு போடப்பட்டுள்ள தடுப்பூசி, தடுப்பூசி போடப்பட்ட காலம் உள்ளிட்ட பல தரவுகளை ஆய்வுசெய்யவேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

45 வயதிற்குட்பட்ட குடியிருப்பாளர்கள் ஜூன் முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்

தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் அது போட்டுகொண்டோரை பாதுகாக்கும் கால அளவு திருப்தியளிப்பதாக உள்ளது என்று மூத்த அமைச்சர் கூறினார்.

மேலும் தடுப்பூசி சான்றிதழுக்கு இருதரப்பு அங்கீகாரம் வழங்குவது குறித்து சில நாடுகளுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பயணிகளுக்கு எல்லைக்கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யும்முன் பிற நாடுகளில் பதிவாகும் தொற்றின் அளவு குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்றார் ஜனில்.

சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி!

அனைத்து ஆய்வுகளும் அதற்கான தரவுகளும் பெற்றபிறகு நிச்சயம் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.