45 வயதிற்குட்பட்ட குடியிருப்பாளர்கள் ஜூன் முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்

Covid-19 vaccination Singapore
Photo: Steven Cornfield/Unsplash

45 வயதிற்குட்பட்ட சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் ஜூன் முதல் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதிற்கு உட்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய அழைக்கப்படலாம் என சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$1 மில்லியன் மதிப்பிலான ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ ரசீதுகள் நன்கொடை..!

தற்போதைய திட்டத்தின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் அவர்களுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று மூத்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று (ஏப்ரல் 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில், தடுப்பூசி திட்டம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 3 நிலவரப்படி, சுமார் 1.52 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஜனில் கூறியுள்ளார்.

சிறுவனை கீழே தள்ளி, காலால் மிதித்து துன்புறுத்திய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை