“தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்புப் பயண திட்டம் மேலும் சில நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்”

Photo: Changi Airport

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை திட்டத்தின்கீழ் ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,322 பயணிகள் சிங்கப்பூருக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்புப் பயணத் திட்டம் அடுத்த சில வாரங்களில், மேலும் சில நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் – மலேசியா

சிங்கப்பூருடன் சிறப்புப் பயணத் தடங்களை தொடங்குவது குறித்து, பல நாடுகளும், வட்டாரங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திரு. ஈஸ்வரன் கூறியுள்ளார்.

சிறப்புப் பயண ஏற்பட்டின் கீழ், சிங்கப்பூர் வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

அவர்கள், சிங்கப்பூர் வந்ததும் மேற்கொள்ளப்படும் பரிசோதனையிலும், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையிலும் கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கவேண்டும். இந்த சிறப்பு பயண ஏற்பட்டின் கீழ், 900க்கும் அதிகமான பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் சில மாற்றங்கள் அறிவிப்பு!