சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் எல்லைகள் – தகுந்த ஏற்பாடுகள் உள்ளன: நிபுணர்கள்..!

flights from china travellers pcr test

சிங்கப்பூரின் எல்லைகளை மீண்டும் திறக்கும் இந்த சூழலில் கிருமித்தொற்று பாதிப்புகளை விரைவாக கண்டறிய நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

அந்த நடவடிக்கைகளில், தொடர்புத் தடங்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துவது, தீவிரப் பரிசோதனைகளை மேற்கொள்வது ஆகியவை அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று பாதித்த ஊழியர்கள் பணிபுரிந்த 20 கட்டுமானத் திட்டங்களுக்கு பாதுகாப்பு நேரம் – BCA..!

புருணை மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு இனி வீட்டில் தங்கும் உத்தரவு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, வெளிநாட்டிலிருந்து இங்கு வருவோர் மத்தியில் கிருமித்தொற்று பாதிப்புகள் அடையாளம் காண முடியாமல் போகலாம். அச்சமயம் மற்ற நடவடிக்கைகள் கைகொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நடவடிக்கைகள், சமூக அளவில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தலைவர் தியோ யிக் யிங் (Teo Yik Ying) கூறியுள்ளார்.

முதலில் விமான நிலையங்களில் பரிசோதனைகளை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.