கிருமித்தொற்று பாதித்த ஊழியர்கள் பணிபுரிந்த 20 கட்டுமானத் திட்டங்களுக்கு பாதுகாப்பு நேரம் – BCA..!

BCA said it has issued a safety time-out notice to 20 construction projects
BCA said it has issued a safety time-out notice to 20 construction projects (PHOTO: Roslan Rahman via Getty Images)

புதிய நோய்ப்பரவலை தொடர்ந்து, சுங்கே தெங்கா லாட்ஜ் தங்கும் விடுதியில் சுமார் 4,800 ஊழியர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், COVID-19 தொற்று பாதித்த ஊழியர்கள் பணிபுரிந்து வந்த 20 கட்டுமானத் திட்டங்களுக்கு பாதுகாப்பு நேரம் குறித்த அறிவிப்பை கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஊழியர் தங்கும் விடுதியில் நோய்த்தொற்று – 4,800 பேர் வீட்டில் தங்க உத்தரவு..!

பாதிக்கப்பட்ட பகுதிகளை கிருமி நீக்கம் செய்வதற்கும், வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கும் அந்த அறிவிப்பு வழிவகை செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 பாதித்த ஊழியர் மற்றும் அவரது சக ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டவுடன், அந்த வேலை இடத்திற்கு பகுதி அல்லது முழு வேலை நிறுத்த உத்தரவு வழங்கப்படலாம் என்று BCA குறிப்பிட்டுள்ளது.

கட்டுமானத் திட்டங்களில், பாதுகாப்பு மேலாண்மை திட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும். மேலும் கிருமித்தொற்று பரவுவதற்கான எந்தவொரு ஆபத்தையும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் BCA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வெளியேற முயன்ற வெளிநாட்டவர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg