ஊழியர் தங்கும் விடுதியில் நோய்த்தொற்று – 4,800 பேர் வீட்டில் தங்க உத்தரவு..!

4,800 workers issued stay-home notice after new COVID-19 cluster at Sungei Tengah Lodge
4,800 workers issued stay-home notice (Screengrab from Google Maps)

சுங்கே தெங்கா லாட்ஜில், சுமார் 4,800 ஊழியர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தெரிவித்துள்ளது.

அந்த தங்கும் விடுதியில் புதிய COVID-19 நோய்ப்பரவல் குழுமம் குறித்த அறிவிப்பு வெளிவந்த ஒரு நாளுக்கு பிறகு இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் சாங்கி கடற்கரையில் 14 வயது சிறுவன் கடலில் மூழ்கி பலி..!

500 Old Choa Chu Kang ரோட்டில் அமைந்துள்ள இந்த தங்கும் விடுதி, சிங்கப்பூரில் மிகப்பெரிய COVID-19 நோய்ப்பரவல் குழுமங்களில் ஒன்றாகும்.

அந்த விடுதியில், COVID-19 நோய்த்தொற்று முழுமையாக இல்லை என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இங்கு 2,200க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 58 பேர் இந்த தங்கும் விடுதியுடன் தொடர்புடையவர்கள், குறிப்பாக அவர்களுக்கு நோய்த்தொற்று அறிகுறி ஏதும் தென்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் வீட்டில் தங்கும் உத்தரவு வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வெளியேற முயன்ற வெளிநாட்டவர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg