சிங்கப்பூரில் கனமழை காரணமாக கிரேக் ரோட்டில் திடீர் வெள்ளம்..!

Brief flash floods at Tanjong Pagar junction after heavy rain
Brief flash floods at Tanjong Pagar junction after heavy rain (PHOTO: PUB, SINGAPORE'S NATIONAL WATER AGENCY/FACEBOOK)

சிங்கப்பூரில் இன்று காலை பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிரேக் ரோட்டில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Duxton ரோட்டில் இருந்து தஞ்சோங் பகார் (Tanjong Pagar) ரோட்டிற்கு செல்லும் வழியில் காலை 9.30 மணி அளவில் வெள்ளம் ஏற்பட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB) முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

உதவி வழங்குவதற்காக PUB அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும் கழகம் தெரிவித்துள்ளது.

காலை வேளையில் மழை பற்றி வானிலை ஆய்வகம் முன்னறிவித்ததைப் போலவே தற்போது மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

UPDATE: Flash floods have subsided in areas below. (Issued 10:10 hrs)***NOTICE: Due to heavy rain, flash floods have…

Posted by PUB, Singapore's National Water Agency on Thursday, August 13, 2020

இந்த திடீர் மலையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சாலைப் போக்குவரத்து தடைபட்டது.

மேலும், அந்த இடத்தைத் தவிர்க்க வேண்டி பொதுமக்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த வெள்ளம் 10 மணியளவில் வடிந்ததாகக் கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தங்கும் விடுதியில் புதிதாக கிருமித்தொற்று கண்டுபிடிப்பு – 800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg