தங்கும் விடுதியில் புதிதாக கிருமித்தொற்று கண்டுபிடிப்பு – 800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

(PHOTO: NY Times)

சிங்கப்பூரில், COVID-19 தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதியில் புதிதாக கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிதாக 800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சோதனைகளை அதிகாரிகள் முடித்துள்ளனர், இருப்பினும் சுமார் 22,800 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

அந்த ஊழியர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் போது சோதிக்கப்படுவர் என்றும், வரும் நாட்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், பின்னர் மெல்லக் குறையும் என்றும் எதிர்பார்ப்பதாக MOH தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று, புதிய COVID-19 பாதிப்புகள் பதிவாகிய பின்னர், புதிய நோய்த்தொற்று பரவல் ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்த வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளை அணுக்கமாக கண்காணிப்பதாகக் சிங்கப்பூர் அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்க கூடுதல் நடவடிக்கைகள்..!

தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் வெப்பநிலையைப் பதிவுசெய்ய வேண்டும் என்றும், கடுமையான சுவாச நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு முறை FWMOMCare செயலியின் மூலம் அதனை தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் நோய்வாய்ப்பட்டதாகக் தெரிவிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையும் கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய நோய்ப்பரவல் அபாயத்தை கட்டுப்படுத்த, இடைநிலை பணிக்குழு (ITF) தங்கும் விடுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நான்கு பிரபல சந்தைகளில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg