வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்க கூடுதல் நடவடிக்கைகள்..!

foreign workers complaimts investigation
Pic: TODAY

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் குழு, கட்டட மற்றும் கட்டுமான ஆணையத்தின் (BCA) ஒப்புதல் இல்லாமல் மீண்டும் பணியைத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான முறையில் மீண்டும் தொடங்கத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

வீடு புதுப்பிப்பதில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மேலும் லிப்ட் பராமரிப்பு, வசதிகள் மேலாண்மை மற்றும் கட்டுமான தளங்களின் பராமரிப்பு போன்ற பணிகளும் இதில் அடங்கும்.

சுமார் 40,000 ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று BCA புதன்கிழமை (ஆகஸ்ட் 12) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில், கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தங்கள் வேலைகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
  • கிருதித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்
  • வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் இல்லாதோர்
  • TraceTogether செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்
  • நோய்த்தொற்று இல்லாத இடம் என்பது உறுதிசெய்யப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள்

இதில் குறிப்பாக, கட்டுமானத் தலங்களுக்கான முக்கியக் குத்தகையாளர்கள் பணியைத் தொடங்குவதற்கு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். அதாவது, முன்தயாரிப்பு கான்கிரீட் வார்ப்புக் கூடம், ஆயத்த கான்கிரீட் கலவை ஆலை உள்ளிட்ட இடங்களும் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டுமானத் திட்டங்களில், 10 தங்கும் இடங்களில் இருந்து வரும் ஊழியர்களை மட்டும் அனுமதிக்கக் கூடிய கட்டுப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இந்த நேரத்தில், முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களை ஒரே தங்குமிடத்தில் ஒன்றிணைப்பதில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முதலாளிகள் மற்றும் விடுதி ஆபரேட்டர்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி செய்துதர வேண்டும் என்று BCA கூறியுள்ளது.

கட்டுமானத் தளங்களில், வெவ்வேறு தங்கும் இடங்களில் இருந்து வரும் ஊழியர்களின் தொடர்பைத் தவிர்க்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

நிலைமைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும், இதில் தணிக்கை மற்றும் பணிநிலையங்களில் ஆய்வுகள் அடங்கும் என்றும் BCA கூடுதலாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நான்கு பிரபல சந்தைகளில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg