சிங்கப்பூரில் நான்கு பிரபல சந்தைகளில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு..!

COVID-19 entry restrictions at 4 popular markets to be eased on weekdays
COVID-19 entry restrictions at 4 popular markets to be eased on weekdays (Photo: TODAY)

வார நாட்களில் கேலாங், யீஷூன், மார்சிலிங் மற்றும் ஜுராங் ஆகிய நான்கு பிரபலமான சந்தைகளுக்கு வருபவர்களுக்கு, நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) முதல், அடையாள அட்டை எண்களின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் நுழைவு நடைமுறை இனி கடைப்பிடிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 நடவடிக்கைகளை தளர்த்துவதன் அடிப்படையின் கீழ், இனி அந்த நுழைவு நடைமுறை கடைப்பிடிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள்..!

சிங்கப்பூரின் இரண்டாம் கட்டத்தின் கீழ், வணிக நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் தொடங்குவதால், நான்கு பிரபலமான சந்தைகளில் அடையாள அட்டை அடிப்படையிலான நுழைவு கட்டுப்பாடுகள் இனி நீக்கப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சந்தைகள்:
  • கேலாங் செராய் சந்தை
  • யீஷூன் ரிங் ரோட்டில் பிளாக் 104/105 இல் Chong Pang சந்தை
  • பிளாக் 20/21 மார்சிலிங் லேன்
  • பிளாக் 505 ஜுராங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 52

சந்தைகளின் வெளியில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதை தொடர்ந்து, அடையாள அட்டை எண்களின் அடிப்படையில் நுழைவு நடைமுறை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் நான்கு தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று குழுமம் பட்டியலில் இருந்து நீக்கம்..!

அந்த நடைமுறையின் கீழ், அவர்களின் அடையாள அட்டையில் கடைசி இலக்கமானது இரட்டைப்படை எண்ணாக இருந்தால், சந்தைகளை மாதத்தின் இரட்டைப்படை தேதிகளில் மட்டுமே பார்வையிட முடியும் என்றும், ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் சந்தைகளை மாதத்தின் ஒற்றைப்படை தேதிகளில் மட்டுமே பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது வார நாள்களில், மேற்குறிப்பிட்ட சந்தைகளில் பெரும்பாலும் பெரிய அளவிலான கூட்டம் காணப்படுவதில்லை என்று NEA தெரிவித்துள்ளது.

அடையாள அட்டையின் கடைசி இலக்க அடிப்படையில், சந்தைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் நடைமுறை இனி வார இறுதி நாள்களில் மட்டும் பின்பற்றப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று சோதனை முடிவு – 23,300 பேர் தனிமை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg