சிங்கப்பூரில் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள்..!

(Photo: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் சோதனை முடிந்த பிறகும், புதிய COVID-19 பரவல்களின் ஆபத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.

முன்னர் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகளில், புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டது என்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) மனிதவள அமைச்சகம் (MOM) உள்ளிட்ட அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் நான்கு தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று குழுமம் பட்டியலில் இருந்து நீக்கம்..!

புதிய நோய்ப்பரவல் அபாயத்தை கட்டுப்படுத்த, இடைநிலை பணிக்குழு (ITF) தங்கும் விடுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தங்கள் வெப்பநிலையைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்றும், கடுமையான சுவாச பிரச்சனை அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு முறை FWMOMCare செயலியின் மூலம் அதனை தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நோய்த்தொற்றுகளின் ஆரம்ப அறிகுறி பற்றி புகார் அளிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உன்னிப்பாக கண்காணிப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலையிடங்களிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முதலாளிகளின் முழு ஒத்துழைப்பும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று சோதனை முடிவு – 23,300 பேர் தனிமை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg