சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

Vaccinated worker infected with COVID-19: More than 1,500 in same dorm test negative
(Photo: AFP)

COVID-19 கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், இந்த ஆகஸ்ட் முதல் ஓய்வு நாட்களில் பொழுதுபோக்கு நிலையங்களை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளை விட்டு வெளியே செல்ல, ஊழியர்கள் EXIT PASSES விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்க கூடுதல் நடவடிக்கைகள்..!

இந்த மாதத்திலிருந்து தொடங்கும் சிறிய அளவிலான முன்னோட்ட சோதனைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் தங்களது ஓய்வு நாட்களில் பொழுதுபோக்கு நிலையங்களை பார்வையிட விண்ணப்பிக்கலாம்.

அதாவது மளிகைப் பொருட்கள், சிம் கார்டுகள் வாங்குவது மற்றும் பணம் அனுப்புவது போன்ற தனிப்பட்ட வேலைகளுக்காக வெளியே செல்லலாம் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

அனைத்து தங்கும் விடுதிகளிலும் COVID-19 தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சகத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

அனைத்து தங்கும் விடுதிகளிலும் COVID-19 நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த கட்டமாக தங்குமிட குடியிருப்பாளர்கள் ஓய்வு மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்காக வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும், அதே நேரத்தில் COVID-19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

SGWorkPass செயலியின் மூலம் ஒரு குறிப்பிட்ட நேரம் வெளியே செல்ல, Exit Pass அனுமதிக்கு குடியிருப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

நிபந்தனைகள்:

வெளியே செல்ல அனுமதி பெற குடியிருப்பாளர்கள் பின்வரும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர், அதாவது வெளியே செல்வதற்கு 2 வாரங்களுக்கு முன், தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் இல்லை.
  • COVID-19 தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட தங்குமிடத்தில் தங்கி இருக்கவேண்டும்.
  • TraceTogether செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்துருக்க வேண்டும்.
  • கிடைக்கக்கூடிய காலியிடங்களில், வெளியே செல்லும் அனுமதி நேரத்தைத் தேர்வுசெய்க.

இந்த Exit Pass அனுமதிக்கான ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படும், மேலும் இது மெல்ல மெல்ல அதிகரிக்கப்படும் என்றும் MOM தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நான்கு பிரபல சந்தைகளில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg