2020 ஆண்டிற்கான சிங்கப்பூர் பட்ஜெட்..!

Budget 2020 to be delivered on Feb 18 (PHOTO: REUTERS)

Singapore Budget 2020 : சிங்கப்பூர் துணை பிரதமரும், நிதி அமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட் அவர்கள் 2020 ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 18 செவ்வாய்க்கிழமை அன்று பாராளுமன்றத்தில் வெளியிடுவார் என்று நிதி அமைச்சகம் (MOF) ஜனவரி 1 ஆம் தேதி புதன்கிழமை அறிக்கையில் அறிவித்துள்ளது.

இப்பட்ஜெட் அறிவிப்பை தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் Singapore budget என்ற இணையதளபக்கத்திலும் நேரடி ஒளிபரப்பை காணலாம் என்று MOF அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் ஸ்கூட் விமானம் தாமதம்..!

ஒவ்வொரு பட்ஜெட்டும் கடந்தகால பட்ஜெட்டுகளை வைத்து உருவாகிறது, மேலும் எதிர்கால பட்ஜெட்க்கு ஒரு அடித்தளத்தை அமைக்கிறது.

இது நம் தேசத்திற்கான பொறுப்புகளையும், நமது நம்பிக்கையையும், நமது மக்களுக்கான முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது என்று திரு ஹெங் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டிருந்தார்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் பட்ஜெட் பற்றிய பொது கருத்துக்கள் ஜனவரி 10 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதற்காக தங்களது கருத்துகளை தெரிவித்த சிங்கப்பூர் மக்களுக்கு MOF நன்றி கூறுவதாக தெரிவித்தது.

நீங்கள் www.singaporebudget.gov.sg / www.reach.gov.sg/budget2020 என்ற இணையதளபக்கத்திலும் தங்களது கருத்துக்களை பதிவிடலாம்.

இதையும் படிங்க : 3 வினாடிகளில் பிறந்த 3 குழந்தைகள்: 2020 ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை சிங்கப்பூர் இனிதே வரவேற்றது..!