சிங்கப்பூர் பட்ஜெட்: ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்குமா?

சிங்கப்பூர் பட்ஜெட்
Singapore Jobs

சிங்கப்பூர் பட்ஜெட்: ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உதவ புதிய தற்காலிக நிதி உதவித் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று (பிப். 16) அறிவித்தார்.

அதாவது ஊழியர்கள் பயிற்சியில் இருக்கும் போது அல்லது வேறு வேலையைத் தேடும்போது இந்த புதிய தற்காலிக திட்டம் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும்

மேலும், இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் திரு வோங் தனது வருடாந்திர பட்ஜெட் உரையில் கூறினார்.

இது SkillsFuture திட்டத்தின் மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலை பறிபோய்விடுமோ என அச்சம்

சிங்கப்பூரில் வேலை பறிபோய்விடுமோ என அஞ்சுவோர் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,320 ஆக பதிவாகியுள்ளது, அதே வேளையில் அதற்கு முந்தைய ஆண்டில் அது 6,440 ஆக இருந்தது.

இந்த 2024 ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும்

Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும்