சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக மோசமான ஆண்டு இது.. வேலை பறிபோய்விடும், சம்பளம் குறையும் என அச்சம்

retrenchments-2024-increase-ntuc-measures

சிங்கப்பூரில் வேலை பறிபோய்விடுமோ என அஞ்சுவோர் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வேலை பறிபோய்விடும் என்று கவலைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர்

இந்த 2024 ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2023 உடன் ஒப்பிடும்போது, 2024இல் ஆட்குறைப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) பொதுச்செயலாளர் Ng Chee Meng நேற்று (பிப்ரவரி 6) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கான அறிகுறிகளை ஏற்கனவே நாங்கள் காணத் தொடங்கிவிட்டோம் என்று கூறிய அவர், குறிப்பாக ஊழியர்கள் ஆட்குறைப்பு இரட்டிப்பாகும் என்றும் சம்பள அதிகரிப்பு மந்தமாகும் அல்லது குறையும் என்றும் குறிப்பிட்டார்.

பல ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழப்பது மற்றும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்தது குறித்த தங்கள் கவலைகளை NTUC யுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

வர்த்தகம் மாற்றப்படுவது மற்றும் மறுசீரமைப்பு ஆகியவை 2023 ஆம் ஆண்டில் ஆட்குறைப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக MOM கூறியது.

மேலும் மொத்த வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி போன்ற துறைகளில் பொருளாதார தலையீடுகளின் தாக்கமும் இதற்கான காரணமாக உள்ளது என அது சொன்னது.

வேலை செய்யும் நோக்கம் இல்லை.. ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் பெற்ற வெளிநாட்டவர் – சிக்கிய கதை