அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர்

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட 82 வயதான முதலாளியின் வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு S$41,000க்கு மேல் பணத்தை மாற்றிய பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண் மாதச் சம்பளத்தை எடுத்துக்கொள்வார் என முதலாளி அவரின் வங்கி கணக்கு விவரங்களை பணிப்பெண்ணுக்கு கூறியுள்ளார்.

பெண்ணுடன் தனியறையில் பிடிபட்ட ஆடவர்.. சலூனில் அந்த மாறி சேவை – பெண் ஊழியர்களும் கைது

ஆனால், ​​அந்தத் விவரங்களை பயன்படுத்தி பணிப்பெண் தனக்கு வர வேண்டிய சம்பள தொகையை விட அதிகமாக பணத்தை மாற்றிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

46 வயதுமிக்க இந்தோனேசியரான அல்பெர்டினா கல்லு என்ற அந்த பணிப்பெண்ணுக்கு திங்கள்கிழமை (பிப்ரவரி 5) அன்று 16 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

முதலாளியின் நம்பிக்கையை மீறி அவ்வாறு செயல்பட்டதாக பணிப்பெண் ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

டிமென்ஷியா ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட 82 வயது மூதாட்டியிடம் அல்பெர்டினா பணிபுரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணுக்கு மாதச் சம்பளமாக S$720 வெள்ளி பணமாகவோ அல்லது வங்கி வழியாக பரிமாற்றமோ செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரலில், முதலாளி தனது DBS வங்கிக் கணக்கின் விவரங்களை அல்பெர்டினாவிடம் கொடுத்துள்ளார். முதலாளிக்கு கண்பார்வை மோசமாக இருந்ததால் அவ்வாறு செய்துள்ளார்.

மேலும் பணிப்பெண் மீது முழு நம்பிக்கை வைத்து சம்பளத்தை மாற்றிக்கொள்வதற்காகவும் அந்த விவரங்களை அவர் வழங்கியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பணிப்பெண், கொஞ்சம் கொஞ்சமாக முதலாளி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியதாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வங்கிக் கணக்கை முதலாளியும் அவரின் உறவினர் ஒருவரும் இணைந்து நிர்வகித்து வந்துள்ளனர்.

ஒரு முறை உறவினர் வங்கிக் கணக்கை சோதித்தபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

சிங்கப்பூரில் உள்ள கடற்கரைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இதனை செய்ய வேண்டாம்