சிங்கப்பூரில் உள்ள கடற்கரைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இதனை செய்ய வேண்டாம்

Pasir Ris, Sembawang beaches No swimming
(Photo: Mothership)

சிங்கப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில கடற்கரைக்கு செல்வோருக்கு முக்கியமான அறிவிப்பை தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது.

அதாவது, பாசிர் ரிஸ் பீச் மற்றும் செம்பவாங் பார்க் கடற்கரையில் நீச்சல் அடிக்க வேண்டாம் என்று பொதுமக்களை NEA அறிவுறுத்தியுள்ளது.

வேலை செய்யும் நோக்கம் இல்லை.. ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் பெற்ற வெளிநாட்டவர் – சிக்கிய கதை

ஏனெனில், அந்த நீரில் என்டோரோகோகஸ் பாக்டீரியா என்னும் நுண்ணுயிர் கிருமியின் அளவு அதிகரித்துள்ளதாக அது எச்சரிக்கை செய்துள்ளது.

இதனால் வயிற்று குடல் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அது சொன்னது.

அதே போல wakeboarding, windsurfing மற்றும் நீரில் மூழ்கும் விளையாட்டு பயிற்சிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அது கேட்டுக்கொண்டது.

அந்த விளையாட்டுகளில் ஈடுபடும்போது முழு உடல் அல்லது முகம் நீரில் மூழ்கியிருக்கும் என்பதால், கடல் நீரை உட்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், படகோட்டம், கயாக்கிங் போன்றவற்றை தொடரலாம் என்று NEA கூறியது.

சிங்கப்பூரில் உள்ள ஏழு பிரபலமான பொழுதுபோக்கு கடற்கரை நீர்நிலையின் தரத்தை அதிகாரிகள் வழக்கமாகச் சோதனை செய்வர்.

இவ்வாறான சோதனையில் மேற்கண்ட கடற்கரை நீரில் நுண்ணுயிர் கிருமியின் அளவு அதிகரித்தது கண்டறியப்பட்டது.

இருப்பினும், மற்ற ஐந்து கடற்கரைகளான ஈஸ்ட் கோஸ்ட் பார்க், சாங்கி, பொங்கோல், சிலேத்தர் தீவு மற்றும் சென்டோசா தீவு ஆகியவற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கையில் ஆயுதத்துடன் போற வழியில் 7 பேரைத் தாக்கிய ஆடவர் – வளைத்துப் பிடித்த பொதுமக்கள்