வேலை செய்யும் நோக்கம் இல்லை.. ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் பெற்ற வெளிநாட்டவர் – சிக்கிய கதை

work permit salary increase
Pic: MOM

Singapore work permit: வேலை செய்யும் நோக்கம் இல்லாத வெளிநாட்டு பெண் ஒருவர் ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதி பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

தைவான் நாட்டுப் பெண்ணான அவர் சிங்கப்பூரில் படிக்கும் தன் பெண்ணுக்கு துணையாக இருக்க விரும்பியுள்ளார்.

கையில் ஆயுதத்துடன் போற வழியில் 7 பேரைத் தாக்கிய ஆடவர் – வளைத்துப் பிடித்த பொதுமக்கள்

வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் கீழ் விதிகளை மீறிய அந்த பெண் தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், 33 வயதான அந்த பெண்ணுக்கு சமீபத்தில் 45 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் தற்போது 15 வாரம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது?

சிங்கப்பூரில் மகளுடன் தங்க உதவி வேண்டி 2020 செப்டம்பரில், சென் தைஜி என்ற ஆடவர் ஒருவரை அந்த பெண் அணுகியுள்ளார்.

பின்னர், Metalco Engineering என்ற நிறுவனத்தின் கீழ் ஒர்க் பெர்மிட் அனுமதிக்கு விண்ணப்பித்து தருவதாகவும், அதற்கான ‘ஏஜென்ட் கட்டணம்’ ஒரு மாதத்திற்கு $1,000 என்றும் சென் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

அதனை அடுத்து, 2020 அக்டோபர் 26 அன்று, லியாங் கைடோங் என்ற ஆடவர் அந்த பெண்ணுக்காக ஒர்க் பெர்மிட் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார்.

அவர் போலியான தகவல்களை கொடுத்து மக்கள் தொடர்பு ஊழியர் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும் பின்னர் விண்ணப்பம் ஏற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த பெண் சிங்கப்பூரில் 13 மாதங்கள் தங்கி இருந்ததாகவும், சென்னுக்கு மொத்தம் $13,000 ‘ஏஜென்ட் கட்டணமாக’ செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக் டிக்கெட் லாட்டரியில் பிரம்மாண்ட பரிசை வென்ற இந்தியர் – இந்திய மதிப்பில் 34 கோடி