ஊழியர்களின் SafeEntry-யை உறுதிசெய்யாத 26 கட்டுமான நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு

(Photo: Today)

கடுமையாக்கப்பட்டுள்ள 2ம் கட்டத்தில், சிங்கப்பூரில் 65க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் கோவிட் -19 பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கட்டிட மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) இன்று (ஜூன் 2) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 31 பேருக்கு தொற்று – சமூக அளவில் 24 பேர் பாதிப்பு

இதில் 26 நிறுவனங்கள், ஊழியர்கள் அல்லது வருகையாளர்களை SafeEntry சோதனை மேற்கொள்ளாமல் தங்கள் பணிநிலையங்களுக்குள் நுழைய அனுமதித்துள்ளது.

அதில் 2 பணியிடங்களில், COVID-19 பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நுழைய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, மீதமுள்ள ஊழியர்களுக்கும் COVID-19 பரவும் அபாயத்தை அவை ஏற்படுத்தியதாக BCA ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானங்கள் தாமதம் – பயணிகள் கடும் அவதி