சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானங்கள் தாமதம் – பயணிகள் கடும் அவதி

Singapore Flights

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானங்கள் தாமதமானதால் அதில் வந்த பயணிகள் பெரும் அவதியை சந்தித்தனர்.

சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின்கீழ், தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

“சிங்கப்பூர் திரும்புவோருக்கு COVID-19 நெகட்டிவ் சான்று இருப்பதை உறுதி செய்வது விமான நிறுவனங்களின் பொறுப்பு”

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு 9.05 மணிக்கு திருச்சிக்கு வந்தடைய வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 11 மணி நேரம் தாமதமாக வந்தது.

அதாவது, வந்த விமானம் நேற்று காலை 8.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல, கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு, 7 மணி நேரம் தாமதமாக வந்த விமானம், நேற்று காலை 4.10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.

இதன் காரணமாக பயணிகள் அனைவரும் பெரும் அவதியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.

கட்டுமான ஊழியர்களுக்கு சுய பரிசோதனை கருவி மூலம் மருத்துவ சோதனை..