“சிங்கப்பூர் திரும்புவோருக்கு COVID-19 நெகட்டிவ் சான்று இருப்பதை உறுதி செய்வது விமான நிறுவனங்களின் பொறுப்பு”

(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள் (PR) ஆகியோரிடம் எதிர்மறை COVID-19 சோதனை சான்றுகள் இருப்பதை உறுதி செய்வது விமான நிறுவனங்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் சிவில் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

சாங்கி விமான நிலையத்துக்கு வரும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்த புதிய அறிவிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்த CAAS விமான நிலைய செயல்பாட்டு ஒழுங்குமுறை மற்றும் விமான பாதுகாப்பு இயக்குனர் மார்கரெட் டான் தெரிவித்தார்.

கட்டுமான ஊழியர்களுக்கு சுய பரிசோதனை கருவி மூலம் மருத்துவ சோதனை..

சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கும் முன் அவை பயணிகளிடம் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழ்கள் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சினால் குறிப்பிடப்பட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம், மருத்துவமனை அல்லது மருத்துவ வசதிகள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“தேவையான PCR சோதனை சான்றிதழ் இல்லாமலோ அல்லது PCR சோதனை முடிவில் தொற்றுநோய் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தாலோ, அவர்களை சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிக்கக் கூடாது.”

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன் நிரந்தரவாசிகள், நெகட்டிவ் முடிவை உறுதி செய்யும் செல்லுபடியாகும் COVID-19 பரிசோதனையை 72 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.

இந்தியா மீதான நுழைவுத் தடை – மோசமாகும் ஊழியர்கள் நெருக்கடி