இந்தியா மீதான நுழைவுத் தடை – மோசமாகும் ஊழியர்கள் நெருக்கடி

(PHOTO: Roslan Rahman via Getty Images)

சிங்கப்பூரில் கொரோனா கிருமிப்பரவல் காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் நிலவும் மோசமான கிருமிப்பரவல் சூழலால் ஏற்பட்ட அச்சம் ஊழியர்களின் பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளது.

சிங்கப்பூரில் மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டினர் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள்!

கட்டுமானம் மற்றும் கப்பல் தளம் போன்ற துறைகள் குறிப்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் குறைந்த ஊதிய ஊழியர்களைச் சார்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் பிற்பகுதியில் இந்தியாவுக்கும், மே மாத தொடக்கத்தில் பிற தெற்காசிய நாடுகளுக்கும் சிங்கப்பூர் பயண வருகையை நிறுத்துவதற்கு முன்பே, புறப்படுதல் மற்றும் கடுமையான பயண விதிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையூறாக அமைந்தது என கூறப்பட்டுள்ளது.

இந்த கிருமிப்பரவல் நெருக்கடி ஏற்கனவே ஒரு வருடம் வரை கட்டுமானத் திட்டங்களின் தாமதத்திற்கு வழிவகுத்தது, செலவை 30% வரை உயர்த்தியும், அதிகப்படியான பணிச்சுமை குறித்த கவலையையும் தூண்டியுள்ளது.

கடந்த ஆண்டு முதல், சில ஊழியர்கள் குறைந்தது பாதி வாரத்திற்கு எட்டு ஷிப்டுகள், ஒவ்வொரு ஷிப்டிலும் எட்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில், சிங்கப்பூர் கட்டிடத் தளங்கள், கப்பல் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 16% சரிந்து 311,000ஆக உள்ளது என்று டிசம்பர் மாத நிலவரப்படி அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.