புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5 உள்பட மூன்று இடங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை!

Photo: Google Maps Street View

 

கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரவும், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிடும் வகையில் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானாலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு, கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள், தொழிலாளர்கள் உள்பட அனைவரும் தாங்களாகவே சுயமாக கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும் வகையில் சுய பரிசோதனை கருவிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

‘வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு’- மன்னிப்புக் கேட்ட ‘StarHub’ நிறுவனம்

மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிப் போடும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டிலிருந்து வெளியே வர முடியாத முதியவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில், 237 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5, 51 சின் ஸ்வீ சாலை மற்றும் 683 டெசன்சன் சாலை ஆகிய மூன்று வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் (Housing Board Blocks) வசிக்கும் குடியிருப்பாளர்களில் சிலருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health) நேற்று (06/08/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 237 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5-ல் (237 Bukit Batok East Avenue 5) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளில் வசிக்கும் 7 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், 51 சின் ஸ்வீ சாலையில் (51 Chin Swee Road) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு வீடுகளில் வசிக்கும் 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டது. மேலும், 683 டெசன்சன் சாலையில் (683 Tessensohn Road) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளில் வசிக்கும் 8 பெருக்கு கொரோனா நோய்த்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதி.!

51 சின் ஸ்வீ சாலையில் உள்ள தொற்று கண்டறியப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டன.

தொற்று கண்டறியப்பட்ட மூன்று அடுக்குமாடு குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் இன்று (07/08/2021) காலை 09.00 AM மணி முதல் மாலை 04.00 PM மணி வரை கட்டாய கொரோனா பரிசோதனை நடைபெறும். இதில் சம்மந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் மட்டுமில்லாமல், அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாதம் 2- ஆம் தேதிக்குப் பின் கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானவர்களுக்குப் பரிசோதனை கட்டாயமில்லை.

கட்டாய கொரோனா பரிசோதனை குறித்த தகவல் குடியிருப்பாளர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பரவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.