வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதி.!

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் எல்லைகளும் படிப்படியாக திறக்கப்பட இருப்பதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு இன்று (06-08-2021) அறிவித்துள்ளது.

அதன்படி, வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும்
அவர்களை சார்ந்தவர்களுக்கும் (work pass holders and dependants) அனுமதி அளிக்கும் நடைமுறை ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தொடங்கும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்துதல் இல்லை!

அனுமதி பெறுவோர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அவர்கள் சிங்கப்பூரின் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, நார்வே, தென் கொரியா, சுவிட்ஸர்லந்து ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் தங்கள் வீடுகளிலேயே 2 வார காலம் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், கிருமித்தொற்று பரவல் அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருவோர்கள் அரசாங்க வசதிகளில் 2 வார காலம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கான விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிகுழு கூறியுள்ளது.

சாங்கி சிறைச்சாலையில் தகராறு: சக கைதியின் காதை கடித்து துப்பிய ஆடவர் – 10 மாதச் சிறை.!