புக்கிட் பாத்தோக் பேருந்து முனைய விபத்து: பேருந்து ஓட்டுனருக்கு சிறை மற்றும் தடை

புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் இரு பேருந்துகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

அதற்க்கு காரணமான டவர் டிரான்சிட் பேருந்து ஓட்டுனருக்கு நேற்று (மே 31) ஆறு வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் பல மாதங்களாக வேவு பார்க்கும் ஆடவர்!

கடந்த ஆண்டு ஜூலை 11 அன்று நடந்த சம்பவத்தின் போது, சிங்கப்பூர் நிரந்தரவாசியான 66 வயதுமிக்க லூ எங் சாய் கவனக்குறைவான செயலால் ஆறு பேருக்கு கடுமையான காயம் ஏற்படுத்திய ஒரு குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து, அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டு பயணிகளுக்கு காயம் ஏற்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.

என்ன நடந்தது?

புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து ஒன்று வெளியேறிக் கொண்டிருந்தது.

அப்போது முனையத்திற்குள் மற்றொரு பேருந்து நுழைந்துக் கொண்டிருந்தது. அச்சமயம், இரண்டு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று நேருக்குநேர் மோதிக் கொண்டது. அதில் ஒரு பேருந்து தடையைத் தாண்டிச் சென்று ஒரு பக்கமாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பதினேழு பேர் காயமடைந்தனர், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இரண்டு பேருந்துகளும் விபத்துக்குள்ளானதில், ஒரு பேருந்து தடையைத் தாண்டிச் சென்று ஒரு பக்கமாகக் கவிழும் CCTV காணொளி:

பெண் ஒருவரை ஏமாற்றி பலே திட்டம்… தமிழக ஆடவர் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு!