காபி கடையில் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவிய புக்கிட் படோக் MP முரளி பிள்ளை!

Bukit Batok MP Murali Pillai helps elderly man
(Photo: Murali Pillai/FB and Singapore Heart Foundation)

சிங்கப்பூரில் நேற்று காலை (மார்ச் 28) புக்கிட் படோக்கில் உள்ள காபி கடை ஒன்றில் முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அப்போது காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை உதவி அவருக்கு ஓடிச்சென்று உதவி செய்தார்.

சிங்கப்பூர் பிரதமர் லீக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு..!

அதனை அடுத்து முதியவர் சுயநினைவு அடைந்தார், பின்னர் அவரை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் முதியவருக்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, அங்கு என்ன நடந்தது என்பதை பற்றி தனது பேஸ்புக் பதிவில் விவரித்தார்.

பிளாக் 155 புக்கிட் படோக் ஸ்ட்ரீட் 11இல் அமைந்துள்ள ஒரு காபி கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த முதியவர் திடீரென சுயநினைவை இழந்து தரையில் விழுந்ததாக காபி கடை உதவியாளர் MP முரளிக்குத் தெரிவித்தார்.

அதை கேட்ட MP முரளி, முதியவருக்கு உதவ விரைந்தார். அதன் பின்னர் அவர் 995 உதவி எண்ணை அழைத்தார்.

அதன் பின்னர் அவருக்கு தேவையான முதலுதவிகளை அவர் அங்கேயே இருந்து வழங்கியுள்ளார்.

பின்னர், SCDF வீரர்கள் 10 நிமிடங்களுக்குள் அங்கு வந்து, முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 6 கடைகளை மூட உத்தரவு