சிங்கப்பூர் பிரதமர் லீக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு..!

(PHOTO: TODAYonline)

பருவநிலை மாற்றம் பற்றி கலந்து பேசுவதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி மாநாடு தொடங்கும் என்றும், சீனா மற்றும் ரஷ்ய அதிபரும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இந்த மாநாடு பற்றி அமெரிக்கா அதிபர் இவர்களுடன் உரையாடவில்லை என்றும் வெள்ளை மளிகை பேச்சாளர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 6 கடைகளை மூட உத்தரவு

இந்த இக்கட்டான கிருமித்தொற்று பரவல் காரணமாக மெய்நிகர் காணொளி மூலம் மாநாடு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் வெளியேறிய பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்து கொள்ளும் என்று பைடன் பதிவியேற்ற முதல் நாளில் உறுதி அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக 2015ஆம் ஆண்டு உடன்படிக்கை ஒப்பந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார ஆற்றல் பெற்ற அமெரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் 19ல் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகில் அதிகளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அப்பர் சிராங்கூனில் உள்ள கால்வாயில் இளைஞரின் சடலம் மீட்பு