சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 6 கடைகளை மூட உத்தரவு

6 F&B outlets ordered to close
(Screengrab: Google Maps)

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 6 உணவு மற்றும் பான கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மூன்று கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) இன்று (மார்ச் 29) தெரிவித்துள்ளது.

அப்பர் சிராங்கூனில் உள்ள கால்வாயில் இளைஞரின் சடலம் மீட்பு

மூட உத்தரவிடப்பட்டுள்ள கடைகள்:

  • ஓரியண்டல் பிளாசாவில் அமைந்துள்ள Club Mao by Barcode மற்றும் Club Bubbery
  • புகிஸ் கியூபில் உள்ள De Luxy
  • Boat Quayல் உள்ள Kiss Bistro
  • ஜூ சியாட்டில் உள்ள SK Karaoke Pub
  • பீச் ரோட்டில் Steamov Restaurant

3 நிறுவங்களுக்கு அபராதம்:

பல்வேறு COVID-19 விதிகளை மீறியதற்காக மேலும் மூன்று இடங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

  • கப்பேஜ் பிளாஸாவில் உள்ள Destiny Japanese KTV Pub – S$2,000 அபராதம்
  • டிரங்கானு ஸ்ட்ரீட்டில் உள்ள Ba Dao Guan – S$2,000 அபராதம்
  • 98 டன்லப் ஸ்ட்ரீட்டில் உள்ள Alankar ரெஸ்டாரண்ட் – S$1,000 அபராதம்

பெடோக்கில் சண்டையில் ஈடுபட்ட 10 நபர்கள் – 5 பேர் கைது