புக்கிட் மேரா வியூ சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடல்.!

Singapore Covid19 36th death
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா வியூ (Bukit Merah View) சந்தை மற்றும் Hawker Centre இன்று (13.06.2021) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) வரை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு, அங்குள்ள கடைக்காரருக்கு கொரோனா வைரஸ் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுத்தப்படுத்துவதற்கும் மற்றும் கிருமிநீக்கம் செய்வதற்கும் அந்த வளாகம் மூடப்படுகிறது.

கட்டுமான இடத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த நபர்!

வளாகத்தை மீண்டும் திறப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தஞ்சோங் பகார் நகரமன்றம் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது‌.

மேலும், கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மட்டும் தினமும் தள்ளுபடி; சிங்கப்பூர் Giant சூப்பர் மார்க்கெட் அறிவிப்பு.!