புக்கிட் பாஞ்சாங்கில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா- 2024!

புக்கிட் பாஞ்சாங்கில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா- 2024!
Photo: Singapore Minister Vivian Balaakrishnan

 

சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங் குடிமக்கள் ஆலோசனைக்குழுவும், புக்கிட் பாஞ்சாங் பழைய குடியிருப்பாளர்கள், புதிய குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து 17- வது ஆண்டாக புக்கிட் பாஞ்சாங்கில் (Bukit Panjang) பொங்கல் திருவிழாவை நடத்தினர்.

ஆடையின்றி, கையில் ஆயுதத்துடன் இருந்த நபர்.. 3 மணிநேரம் போராடி பிடித்த போலீஸ்

ஜனவரி 20- ஆம் தேதி மாலை 05.30 மணிக்கு நடந்த பொங்கல் திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரும், ஹாலந்து- புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஹாலந்து- புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா, புக்கிட் பாஞ்சாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புக்கிட் பாஞ்சாங்கில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா- 2024!
Photo: Singapore Minister Vivian Balakrishnan

சிறப்பு விருந்தினர்களுக்கு மேள தாளங்கள் முழங்கவும், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடனும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொங்கல் விழாவை சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். 2,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பொங்கல் திருவிழாவில், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.

சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க

வடை சுடுதல், தோசை சுடுதல், முறுக்குப் பிழிதல், பொங்கல் தயாரித்தல் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் பொங்கல் திருவிழாவில் இடம் பெற்றது. இதனை நேரில் பார்த்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வியந்தார்.

புக்கிட் பாஞ்சாங்கில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா- 2024!
Photo: Singapore Minister Vivian Balakrishnan

பசு மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் உணவுக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. பொங்கல் திருவிழாவில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.