சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க

migrant worker lost money scammed
Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் ஆள்மாறாட்ட பண மோசடியில் சிக்கி மொத்த பணத்தையும் இழந்ததாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஊழியரான முனியாண்டி இளையராஜா (35), சிங்கப்பூரில் 5 ஆண்டுகளாக கட்டுமான துறையில் வேலை பார்த்து வருகிறார் என தமிழ் முரசு கூறியுள்ளது.

ஆடையின்றி, கையில் ஆயுதத்துடன் இருந்த நபர்.. 3 மணிநேரம் போராடி பிடித்த போலீஸ்

கடந்த ஜன.17 ஆம் தேதி அன்று மனிதவள அமைச்சகத்தில் இருந்து பேசுவதாக அவருக்கு அழைப்பு வந்துள்ளது, அதில் இருவர் முகக்கவசம் அணிந்து பேசியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது; தாங்கள் மனிதவள அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி.., பாஸ்போர்ட், அடையாள அட்டை, வங்கி அட்டை மற்றும் கணக்கு விவரங்களை கூறுமாறு கேட்டுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய முனியாண்டி, அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார்.

பின்னர், உங்கள் கைப்பேசிக்கு OTP குறுஞ்செய்தி வரும் என அவர்கள் கூற, “என்னிடம் (கைப்பேசியில்) பணமில்லாததால் குறுஞ்செய்தி வராது” என முனியாண்டி கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து.., முனியாண்டியிடம் 2 வங்கி கணக்குகள் இருப்பதாகவும், அதனால் PIN முடக்கப்பட்டு இருப்பதாகவும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.

ஆகையால், நாங்கள் சொல்வதை அப்படியே செய்யவேண்டும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பி அப்படியே அனைத்தையும் செய்த ஊழியர் முனியாண்டி, அவர்கள் சொன்னபடி பின்னர் ATM சென்றுள்ளார்.

அங்கு சென்ற முனியாண்டி, அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் இரண்டு முறை கிட்டதட்ட S$840 ஐ அனுப்பி ஏமாந்துபோனார்.

பின்னர் இதை போலி என நண்பர்கள் சொல்லி அறிந்த முனியாண்டி, வங்கி கணக்கை முடக்கி, போலிசிடம் புகார் செய்தார்.

இருப்பினும், போன பணம் போனது தான். மனைவி மற்றும் 2 சிறு குழந்தைகளை சொந்த ஊரில் விட்டுவிட்டு இங்கு வந்து சிரமப்பட்டு சம்பாரித்த பணத்தை இழந்ததாக கூறி அவர் கதறி அழுதார் என கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் தராதீர், இதை மற்ற ஊழியர்களுக்கு பகிர்ந்து உங்களால் முடிந்த விழுப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

இந்தியருக்கு சிறை, ஆறு பிரம்படிகள்.. சிங்கப்பூரில் இளம் பெண்ணை தூக்கிச்சென்று மானபங்கம் செய்த கொடூரம்