பள்ளி பேருந்து, கார் சம்பந்தப்பட்ட கடுமையான விபத்து: கீழே விழுந்த தெருவிளக்கு கம்பம் – தீப்பற்றிய கார்

bukit-timah-accident-burning-car-wrecked-school-bus
Reddit

புக்கிட் திமா சாலையில் இன்று (மார்ச் 6) அதிகாலையில் தனியார் பள்ளி பேருந்து மற்றும் கார் சம்பந்தப்பட்ட மோசமான விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து புக்கிட் திமா சாலை மற்றும் ஆறாவது அவென்யூ சந்திப்பு அருகே நடந்தது.

சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி

விபத்து தொடர்பான புகைப்படங்கள் ஆன்லைனில் பல்வேறு தளங்களில் வெளியிடப்பட்டன.

பேருந்தின் முன்பக்க இரு சக்கரங்களும் காணவில்லை என்பதையும், முன் கதவு, கண்ணாடி, புத்தகங்கள் உள்ளிட்டவை சாலையில் சிதறிக் கிடப்பதையும் புகைப்படங்களில் காண முடிந்தது.

விபத்தில் சிக்கிய கார் தீப்பற்றி எரிவதையும், தெருவிளக்கு கம்பம் கீழே விழுந்து கிடப்பதையும் வீடியோ ஒன்றில் காண முடிந்தது.

இந்த விபத்தால் காலை 11 மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

முழு விவரங்கள் அப்டேட் செய்யப்படும், இணைந்திருங்கள்.

Video: https://www.facebook.com/watch/?v=384310664241239

சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்