சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி

Singapore-boss visit-his worker-showroom vedaranyam
Tamil Media

சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேதாரண்யத்தில் தொழில் தொடங்கிய ஊழியரை நேரில் பார்க்க சென்ற சிங்கப்பூர் முதலாளிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜன். இவர் சிங்கப்பூரில் 14 ஆண்டுகளுக்கு மேலாக மர பர்னிச்சர் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்

நிறுவனத்துக்காக நல்ல வருவாய் ஈட்டுகொடுத்த அவர், மர தொழிலில் இருக்கும் தொழில் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.

இந்நிலையில், சொந்தமாக தொழில் தொடங்க நினைத்த சண்முகராஜன், சிங்கப்பூரில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் வந்தார்.

பின்னர் ஆயக்காரன்புலத்தில் மர பர்னிச்சர் கடையை அவர் திறந்தார். இதுபற்றி அறிந்த அவரின் சிங்கப்பூர் முதலாளி கோலிஞ்சி சண்முகராஜன் கடையை பார்க்க விரும்புவதாக சண்முகராஜனிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

இதனை அடுத்து, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த கோலிஞ்சி, தன் நிறுவன இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரையும் உடன் அழைத்து வந்தார்.

அவர்களை சிறப்பான முறையில் அழைத்துச்செல்ல விரும்பிய சண்முகராஜன், குதிரை சாரட்டு வண்டியில் அவர்களை ஏற்றி சுமார் 3 கி.மீ ஊர்வலமாக தன் கடைக்கு அழைத்து சென்றார்.

கடைக்கு வந்த அவர்களுக்கு வான வேடிக்கைகளுடன், மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு அளி்கப்பட்டது.

தன்னிடம் வேலை பார்த்த ஊழியர் தற்போது முதலாளியாக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கோலிஞ்சி கூறினார்.

ONE Pass வேலை அனுமதி.. குறைந்தபட்சம் S$30,000 சம்பளம் – 4,200 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி