ONE Pass வேலை அனுமதி.. குறைந்தபட்சம் S$30,000 சம்பளம் – 4,200 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி

ONE Pass வேலை அனுமதி
Jeremy Ong

ONE Pass வேலை அனுமதி திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

அதன்கீழ், இந்த ஆண்டு ஜனவரி 1 வரையிலான நிலவரப்பபடி, கிட்டத்தட்ட 4,200 வெளிநாட்டவர்களுக்கு ONE Pass அனுமதி விண்ணப்பங்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) ஒப்புதல் அளித்துள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்

இந்த ONE Pass வேலை அனுமதிக்கு குறைந்தபட்சம் S$30,000 சம்பளம் வழங்கப்படும் என்பது விதி.

எண்ணிக்கையில் பெரியதாக இல்லாவிட்டாலும், அவர்கள் அந்தந்த துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

ONE Pass வேலை அனுமதி யாருக்கு?

மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அதிக சம்பாத்தியம், திறன்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்ட உலகளாவிய சிறந்த திறமையாளர்களை ஈர்க்கும் வகையில் ONE Pass வேலை அனுமதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ONE Pass அனுமதியுடையவர்கள் நிரந்தர வேலையில்லாமல் சிங்கப்பூரில் தங்கலாம்.

ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்