தன்னுடைய கணவர் இறந்த செய்தியை கேட்டு, பேருந்தை நிறுத்திவிட்டு கதறி அழுத பேருந்து ஓட்டுநர்..!

Bus captain in Singapore breaks down after news of husband's death
Bus captain in Singapore breaks down after news of husband's death

கணவர் உயிரிழந்தார் என்ற சோகமான செய்தி கிடைத்ததும் பேருந்து ஓட்டுநர் கதறி அழுத காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

சுமார் 15 நிமிடம் கொண்ட அந்த காணொளி நேற்று (மே 24) அதிகாலையில் முகநூலில் வெளியானது. ஆயிரக்கணக்கானோர் அதனை பகிர்ந்தும் உள்ளனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அன்பளிப்புப் பொட்டலங்கள்..!

பேருந்தில் ஓட்டுநர் கலக்கமடைந்த நிலையிலும், சத்தமாக அழுவதையும் கண்ட வழிப்போக்கர் ஒருவர் இந்த காணொளியை பதிவு செய்துள்ளார்.

அதாவது அந்த பேருந்து, கிளெமென்டி அவே 1-இல் (Clementi Ave 1) பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து, அந்த பேருந்து ஓட்டுனரின் கணவர் இறந்த செய்தியை, அவர் தொலைபேசி வழியாக பெற்றதை அந்த வழிப்போக்கர் கேட்டறிந்தார். அந்த ஓட்டுநர் மலேசியர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த காணொளியில் இரு ஆடவர்கள், ஓட்டுநரை சமாதானப் படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஓட்டுனருக்கு டிஸ்ஸு காகிதங்களையும், பானங்களையும் வழங்கி ஆறுதல் அடைய செய்தனர்.

இந்த காணொளி FabricationsAboutThePAP முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/FabricationsAboutThePAP/videos/587841981855855/

அந்த பெண்மணி கதறி அழும் காட்சிகள் காண்போர் நெஞ்சை உடைய செய்வதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மேலும் 548 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!