பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவருக்கு 24 வாரங்கள் சிறைத் தண்டனை!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

 

நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் 16- ஆம் தேதி அன்று, மதியம் 01.15 மணியளவில், ஜூரோங் ஈஸ்ட் பேருந்து சந்திப்பு நிலையத்தில் (Jurong East Bus Interchange) 334 எண் கொண்ட பேருந்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது என்னவென்றால், அந்த பேருந்தில் ஷேக் முகமது அப்துல் சமத் ஹஜி அப்துரஹீம் (Shake Mohammed Abdul Samad Haji Abduraheem) (வயது 46) என்பவர் பயணம் மேற்கொண்டார். அப்போது பேருந்து ஓட்டுநரான மலேசியாவைச் சேர்ந்த லோ சுன் கியாட்டின் (வயது 28), முகத்தை அந்த பயணி கீறியதாகவும், தாக்கியதாகவும், அவரது முகக்கவசத்தைப் பிடித்து கீழே இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வார் மெமோரியல் பார்க்கில் ஷர்ப்போர்ட் மூலம் உலாவிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இது தொடர்பாக, பேருந்து ஓட்டுநர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர் பயணியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஓட்டுநர் லோ அந்த பயணியிடம் முகக்கவசத்தை சரியாக அணியுமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த பயணி ஓட்டுநரை கழுதை என்றும், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், பேருந்தின் கட்டுப்பாட்டு நெம்புகோலையும் அவர் இழுத்து ஏறத்தாழ, 1,500 சிங்கப்பூர் டாலருக்கு சேதம் விளைவித்தது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, பேருந்து பயணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று (13/09/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட பேருந்து பயணி ஷேக் முகமது அப்துல் சமத் ஹஜி அப்துரஹீம் தான் செய்த குற்றத்தை நீதிபதி முன் ஒப்புக் கொண்டார்.

அதி நவீன வசதிகளுடன் திறக்கப்பட உள்ள ‘துவாஸ்’ துறைமுகம்!

இதையடுத்து, அவருக்கு 24 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து, அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.