பெண் கால்களை இழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிறை, வாகனமோட்ட தடை

ஓட்டுநருக்கு சிறை, வாகனமோட்ட தடை
Google Maps

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வயதான பெண்ணின் கால்களில் பேருந்தை ஏற்றிய ஓட்டுநருக்கு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்-ஜோகூர் பேருந்து ஓட்டுநரான அவருக்கு மூன்று வார சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் நேற்று முன்தினம் (மார்ச் 15) விதிக்கப்பட்டது.

நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு புத்தம் புதிய கார் – “வாக்குகளை நிறைவேற்றுவதில் முதலாளி சிறந்தவர்”

கடைசிப் பயணியான அந்த பெண் பாதுகாப்பாக கீழே இறங்கினாரா என்பதை அவர் சரிபார்க்கத் தவறியதால், 74 வயதான அந்தப் பெண் கீழே விழுந்தார் என சொல்லப்பட்டுள்ளது.

அப்போது பேருந்தின் பின்பக்க டயர் பெண்ணின் இரு கால்களிலும் ஏறியதால் கடும் காயம் ஏற்பட்டு, கால் நசுங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக அந்த பெண்ணின் கால்கள் முழங்காலுக்கு மேல் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூர்-ஜோகூர் விரைவு பேருந்து ஓட்டுநரான 45 வயதான குணசீலன் ஆர் சுப்ரமணியம், கவனக்குறைவான செயலால் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக கடந்த மார்ச் 8 அன்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

குணசீலன் விடுவிக்கப்பட்ட நாள் முதல் இரு ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் அனைத்து வகுப்பு வாகனங்களையும் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் 2019 ஜூன் 24, அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடந்தது.

தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் கவனக்குறைவான செயலுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை.. உறுப்புகளை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, பிரம்படி