பேருந்து சேவை எண் 167 குறித்த நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

பேருந்து சேவை எண் 167 குறித்த நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!
Photo: Tower Transit

 

சிங்கப்பூரில் பேருந்து சேவை எண் 167- ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நிலப் போக்குவரத்து ஆணையம்.

சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 71 பேர் கைது

சிங்கப்பூரின் செம்பவாங்கிலிருந்து அப்பர் தாம்சன், ஆர்ச்சர்ட் சாலை வழியாக புக்கிட் மேராவுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை எண் 167, வரும் டிசம்பர் 17- ஆம் தேதி முதல் நாள்தோறும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

Singapore Viral video: உணவு தட்டில் உயிருடன் படுத்து நெளிந்த எலி.. உணவகத்தில் அலறிய பொதுமக்கள் (Video)

முன்னதாக, தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையையொட்டிய, வழித்தடத்தில் இயங்கும் பேருந்துச் சேவைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் 10- ஆம் தேதி முதல் பேருந்து சேவை எண் 167 முழுமையாக நிறுத்தப்படும் என்று கடந்த நவம்பர் 17- ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், பேருந்து சேவை எண் 167 நிறுத்தப்படும் முடிவை ரத்துச் செய்து, பேருந்து சேவையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.