Singapore Viral video: உணவு தட்டில் உயிருடன் படுத்து நெளிந்த எலி.. உணவகத்தில் அலறிய பொதுமக்கள் (Video)

rat-orchard-road-food-court
Internet

Singapore Viral video: ஆர்ச்சட் ரோட்டில் இருக்கும் உணவகம் ஒன்றில், உணவு வைக்கும் தட்டில் எலி படுத்துக்கொண்டு நெளிந்து கொண்டிருக்கும் காணொளி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவங்காடி நிலையத்தின் மேற்கூரையிலிருந்து கீழே உள்ள உணவு தட்டையில் அந்த எலி விழுந்தததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்

சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியில், அங்கிருந்த மக்கள் அச்சத்தில் திடுக்கிடுவதையும் காண முடிந்தது.

இந்த சம்பவம் கடந்த நவம்பர் 25 அன்று, ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள டாங் பிளாசாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள டாங்ஸ் மார்க்கெட், உணவங்காடி நிலையத்தில் நடந்தது என ஸ்டாம்ப் கூறியுள்ளது.

அது Fei Siong குழுமம் நடத்தும் உணவங்காடி நிலையம் என்பது கூடுதல் தகவல்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) இன்று (நவ.28) கூறியது.

தவறிழைக்கும் நிறுவனம் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்பதையும் SFA சொன்னது.

இந்திய பணிப்பெண்ணுக்கு சொந்த ஊரில் வீடு கட்டிக்கொடுத்த சிங்கப்பூர் முதலாளி – “பணிப்பெண் கிடைத்தது எங்கள் பாக்கியம்” என புகழாரம்