சில பேருந்து சேவையில் பயணப் பாதையில் மாற்றம்- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் அறிவிப்பு!

Photo: SBS Bus Wikipedia

சிங்கப்பூரில் உள்ள பொதுபோக்குவரத்து சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று எஸ்பிஎஸ் டிரான்ஸிட் (SBS Transit Ltd). இந்த நிறுவனம் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பேருந்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கனோர் பயணிக்கின்றன. இதனால் இந்நிறுவனம் அதிக வருவாய் ஈட்டி வருகிறது.

VTL பயணம்: விமான கட்டணத்தை விட COVID-19 சோதனைகளுக்கான செலவு அதிகம்

இந்த நிலையில், 22, 65, 506 என்ற எண்களைக் கொண்ட பேருந்து சேவையில் பயணப் பாதையில் மாற்றம் செய்துள்ள அறிவித்துள்ள எஸ்பிஎஸ் டிரான்ஸிட், வரும் டிசம்பர் 12- ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் டிசம்பர் 12- ஆம் தேதி முதல் 22 என்ற எண் கொண்ட பேருந்து தொடக்கத்தில் இருந்து பயணிப்பாதை அங் மோ கியோவில் இருந்து தெம்பனீஸ் வரை ஆகும். ஆனால், தற்போது மாற்றியமைக்கப்பட்ட பயணப் பாதையின் படி, அங் மோ கியோ முதல் யூனுஸ் வரை பேருந்து சேவையை வழங்கும். எனவே, இப்பேருந்து இனி யூனுஸ் லிங்குக்கும் தெம்பனீஸுக்கும் இடையில் பயணிக்காது.

ஆசியான்- சீனா சிறப்பு உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு!

டெளன்டவுன் ரயில் பாதை இப்போது கூடுதல் பயண வழங்குவதால், பேருந்து சேவை 22 அங் மோ கியோவில் இருந்து யூனுஸ் வரை மாற்றியமைக்கப்படுகிறது. தெம்பனீஸ் நகரில் இருந்து பிடோக் ரெசர்வோர் சாலைக்குப் பயணம் செல்லும் பயணிகள், பேருந்து சேவைகள் 8, 65 ஆகியவற்றில் ஏறி, ஊபியில் பேருந்து சேவை 22- க்கு மாறலாம். பயணிகள் எம்ஆர்டி இரயிலிலும் பயணம் செய்யலாம்.

65 என்ற எண் கொண்ட பேருந்து தொடக்கத்திலிருந்தே ஹார்பர்ஃபிரண்ட் வழியாக தெம்பனீஸ் அவென்யூ 1 மற்றும் அவென்யூ 5 பயணப்பாதை வழியாக பேருந்து சேவையை வழங்கி வந்தது. இந்த நிலையில், மாற்றியமைக்கப்பட்ட பயணப் பாதையின் படி, தெம்பனீஸ் அவென்யூ 4 வழியாக பேருந்து பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 விதிகளை மீறி நடந்ததாக காட்டும் இறுதி ஊர்வல காணொளி: நெட்டிசன்கள் காட்டம்

பேருந்து சேவை 22 அங் மோ கியோவுக்கும் யூனுஸுக்கும் இடையில் பயணம் செய்ய மாற்றியமைக்கப்படுவதால், பேருந்து சேவை 65 தெம்பனீஸ் அவென்யூ 4- க்கு சேவை வழங்க மாற்றியமைக்கப்படுகிறது. இதனால், தெம்பனீஸ் அவென்யூ 1 மற்றும் அவென்யூ 5- ல் உள்ள இரு ஜோடி பேருந்து நிறுத்தங்களில் இச்சேவை நிற்காது.

தவிர்க்கப்படும் பேருந்து நிறுத்தங்களில் உள்ள பயணிகள், பேருந்து சேவைகள் 21, 67, 168 எடுத்து பிடோக் ரெசர்வோர் சாலையில் சேவை 65- க்கு மாறலாம். 506- என்ற எண் கொண்ட பேருந்து ஜாலான் தோ பாயோவுக்கும் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட்டுக்கும் இடையில் பயணிக்காது. மாற்றியமைக்கப்பட்ட பாதையின் படி, இனி ஜூரோங் ஈஸ்ட் மற்றும் சிராங்கூன் இடையே பேருந்து பயணிக்கும்.

தனது மனைவிக்கு விலையுயர்ந்த iPhone வாங்கி கொடுக்க விருப்பம் – நிறைவேற்றி காட்டிய ஊழியர்

டெளன்டவுன் ரயில் பாதை இப்போது கூடுதல் பயண வழிகளை வழங்குவதால், பேருந்து சேவை 506 ஜூரோங் ஈஸ்ட்டில் இருந்து சிராங்கூன் வரை சேவை வழங்க மாற்றியமைக்கப்படுகிறது.

நீங்கள் தோ பாயோவுக்கும் பிடோக் ரெசர்வோருக்கும் இடையில் பயணம் செல்ல, பேருந்து சேவைகள் 5, 8, 59 எடுக்கலாம்.

பிடோக், பிடோக் ரெசர்வோர் பகுதிகளிலுள்ள மற்ற முக்கிய மாற்றுப் பேருந்து சேவைகளில் சேவைகள் 21, 25, 28, 45, 46, 67, 228 ஆகியன உள்ளடங்கும். அதோடு, நீண்டதூரப் பயணத்திற்கு எம்ஆர்டி ரயிலிலும் பயணிகள் செல்லலாம். பயணப் பாதை மாற்றம் வரும் டிசம்பர் 12- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சிங்கப்பூரில் மேலும் 1,461 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

மேல் விவரங்களுக்கு, எஸ்பிஎஸ் டிரான்ஸிட் வாடிக்கையாளர் சேவை எண் 1800-287-2727 (தினமும் காலை 07.30 மணி முதல் இரவு 08.00மணி வரை) தொடர்புக் கொள்ளவும் அல்லது www.sbstransit.com.sg என்ற இணையப் பக்கத்திற்கு செல்லவும்.” இவ்வாறு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் தெரிவித்துள்ளது.