விரைவுச்சாலையில் விபத்துக்குள்ளான அதிவேக சூப்பர் கார்..!

Car crash along ECP
Pic: Roads.sg/FB

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் காலை 7:10 மணி அளவில், சாங்கியை நோக்கி செல்லும் விரைவுச் சாலையில் விலையுயர்ந்த McLaren 720S ரக கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, தீடீரென அந்த கார் சாலைக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த ஆண்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை 13% அதிகரிப்பு

இதையடுத்து, விலையுயர்ந்த அந்த காரை ஒட்டி சென்ற 42 வயது ஆடவர் ராபிள்ஸ் (Raffles) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

காரை ஓட்டிச்சென்ற ராபிள்ஸ் என்பவரை
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது அவர் சுயநினைவோடு இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான அந்த விலையுயர்ந்த காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிவேகமாக செல்லக்கூடிய அந்த McLaren 720S காரை “சூப்பர் கார்” என்று கார் பிரியர்கள் Roads.Sg முகநூல் பக்கத்தில் கூறிவருகின்றனர்.

நள்ளிரவிலும் உழைக்கும் கட்டுமான ஊழியர்கள் – உழைப்பை கண்டு அன்பளிப்பு வழங்கிய நல்லுள்ளங்கள்!