பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தையில் பேசி, மொபைல் போனை தூக்கி வீசி ரகளை செய்த நபர்

Car driver charged causing public nuisance

சிங்கப்பூரில் பேருந்துக்கு இடையூறு விளைவித்து, மோசமாக நடந்துகொண்ட 42 வயது ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த ஆடவர், ஓட்டுனரை அநாகரீகமாகக் பேசி, அவரின் மொபைல் போனை சாலையில் வீசி எறிந்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக நேற்று (நவ. 5) குற்றம் பதிவு செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது Facebook… தொடரும் பணிநீக்கம் – கலக்கத்தில் சாதாரண ஊழியர்கள்

கடந்த மாதம் அக்டோபர் 31 ஆம் தேதி நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார் ஓட்டுனரின் பெயர் – தியோ கியான் சின்.

ஃப்ளோரா டிரைவில் பேருந்து நிறுத்தத்தில் SBS டிரான்சிட் சர்வீஸ் 4 பேருந்தின் பாதையைத் தடுத்து தியோ கலகத்தில் ஈடுப்பட்டதாக பேருந்து நிறுவன துணைத் தலைவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று ROADS.sg என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்து தியோவை எச்சரித்ததாகவும், ஆனால் அவர் நகரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, தியோ தனது வாகனத்திலிருந்து வெளியே வந்து, பேருந்து ஓட்டுனரை நோக்கி சத்தம் போட்டு, ரகளையில் ஈடுபட்டார் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தில் நடக்கும் மோசடி – “எல்லாமே பெர்பெக்ட்’ஆ இருந்துச்சி” – ஏமாந்தவர் கண்ணீர்