சிங்கப்பூரின் கிழக்கு பகுதியை மேலும் மெருகூட்டும் புதிய பசுமைப் பாதை திட்டம்..!

central green corridor Changi Beach Park
(Photo: NParks)

சிங்கப்பூரின் கிழக்கு பகுதியை மேலும் மெருகூட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா மற்றும் சாங்கி கடற்கரை பூங்காவை இணைக்கும் மத்திய பசுமை பாதை உருவாக்கப்படும் என்று துணை பிரதமர் திரு. ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) இன்று (செப்டம்பர் 26) தெரிவித்தார்.

இந்த புதிய பாதை, நியூ அப்பர் சாங்கி ரோடு (New Upper Changi Road), லோயாங் வே (Loyang Way) ஆகியவற்றை இணைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் 162 சந்தேக நபர்கள் கைது..!

மத்திய பசுமை நடைபாதையை, மற்ற பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுடன் இணைக்க, சமூக நடைபாதை வலையமைப்பும் அமைக்கப்படும் என்று திரு ஹெங் கூறியுள்ளார்.

மேலும், இதில் 15 கி.மீ பாதை முழுவதும் மிதிவண்டி ஓட்டப் பாதைகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களும் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அதிகமான சிங்கப்பூரர்கள் இயற்கை வளங்கள் மற்றும் பூங்காக்களை நாடியதை அவர் குறிப்பிட்டார்.

மேலும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதை பற்றியும், பசுமைப்படுத்தும் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் திரு ஹெங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வரும் 2030ஆம் ஆண்டுக்குள்ளாக, சுமார் 300 கிலோமீட்டர் நீளம் கொண்ட பசுமை நடைபாதைகள் அமைக்க திட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில், மொத்தம் 130 கி.மீ நீளம் கொண்ட 34 இயற்கை பாதைகள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில், தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) 300 கி.மீ இயற்கை வழிகளை உருவாக்கும், அதே போல ஒவ்வொரு சாலையும் நீண்ட காலத்திற்கு ஒரு இயற்கை பாதையாக மாற்றும் என்று நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…