சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!

India tamil Nadu Flights Singapore Trichy
PHOTO: HCI Singapore

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த புதுப்பிப்பு அட்டவணையில், தமிழகத்தின் திருச்சிராப்பள்ளிக்கு அதிக விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும், சென்னையும், மதுரையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக இலக்குடன் கூடிய தனிமைப்படுத்தப்படும் அணுகுமுறை..!

அதே போல அடுத்த மாதம் செல்லும் விமானத்தின் அட்டவணையும் அதில் இடம் பெற்றுள்ளது. ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அதே போல, சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக நெகடிவ் COVID-19 சோதனை முடிவு இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த செப்டம்பர் 23 அன்று தெரிவித்தது.

PCR சோதனை முடிவுகளை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் அல்லது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்திற்கு முந்தைய சோதனை என்பது, சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாத பயணிகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தொற்றில் இருந்து குணமடைந்தோர், மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…