தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக இலக்குடன் கூடிய தனிமைப்படுத்தப்படும் அணுகுமுறை..!

(Photo: AFP)

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு COVID-19 பரவுவதைத் தடுப்பதற்காக, தற்போது அதிக இலக்கு கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட அணுகுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தற்போது முழு பிளாக்குகளுக்கு பதிலாக படிநிலைகள் அல்லது பிரிவுகளாக தனிமைப்படுத்தப்படலாம் என்று மனிதவள அமைச்சகம் (MOM) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தொற்றில் இருந்து குணமடைந்தோர், மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!

நோய்த்தொற்று ஏற்பட்டு, 150 நாட்களுக்குள் குணமடைந்து மீண்டு வந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக இலக்கு கொண்ட இந்த அணுகுமுறை, தங்கும் விடுதிகள், தற்காலிக தளங்கள், தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான தற்காலிக விடுதிகள் ஆகியவற்றின் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில், குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்த கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன என்பதை MOM மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவை கணக்கில் எடுத்துள்ளன என்று MOM கூறியுள்ளது.

இதில் மின்காந்த முறைகள், தனிப்பட்ட கதவுகளை ஊழியர்கள் பயன்படுத்தும் முறை போன்றவை அமல்படுத்தப்பட்டன. மேலும் ஊழியர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதற்கு தேவையான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள், ஊழியர்கள் பாதுகாப்பாக வேலைக்கு மீண்டும் செல்வதை உறுதி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து பயணிகள் எடுக்கும் COVID-19 சோதனைகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களாக இருக்க வேண்டும் – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…